சி.சி.ரி.வி கமரா காட்சிகளையும் ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்கவும்: நாமல்
Mayoorikka
3 years ago

ரம்புக்கனை சம்பவத்துக்குப் பின்னர் மற்றுமொரு குழு இருப்பதாக கூறுகின்றனர் என ஆளும் தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், ஓட்டோவுக்கு பொலிஸார் தீ மூட்டியதாக சொல்கின்றனர் என எதிர்க்கட்சி எம்.பியான கபீர் ஹாசீம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய நாமல் ராஜபக்ஷ எம்.பி, “இவ்வாறான சம்பவத்தை அனுமதிக்க முடியாது. அதேபோல, ஓட்டோவுக்கு பொலிஸார் தீ மூட்டியதாக சொல்கின்றனர்.
இந்நிலையில் எரிபொருள் பவுசரின் டயர்களின் காற்றை இறக்குவதற்காக ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
இதேபோல, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு தீ மூட்டியதாக கூறுகின்றனர். ஆகையால், சகல சி.சி.ரி.வி கமெரா காட்சிகளையும் ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்கவும் என்றும் நாமல் கேட்டார்.



