இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்த இந்திய நிதி அமைச்சர்

Mayoorikka
3 years ago
இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்த இந்திய நிதி அமைச்சர்

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குமாறு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டர்லினா ஜோர்ஜிவா மற்றும் இந்திய நிதியமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வெளிநாடுகள் மாத்திரமின்றி சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு உதவ முன்வருவது அவசியம் என்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விரைவில் நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக  சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டர்லினா ஜோர்ஜிவா உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!