சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்று ஆரம்பம்!

Mayoorikka
4 years ago
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்று ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோர்  நேற்று அதிகாலை வொஷிங்டன் நோக்கி பயணிமாகினர்.

இதற்கமைய இந்த குழுவினர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்கள்.

இலங்கைக்கு இந்த வருடத்திற்கு, 3 முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4