கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடியதால் குழப்பத்தில் ஈடுபட்ட பிக்கு!

Nila
4 years ago
கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில்  தமிழில் தேசிய கீதம் பாடியதால்  குழப்பத்தில் ஈடுபட்ட பிக்கு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டிருந்தது.

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் பலர் கேள்வி எழுப்பிவந்த நிலையில், நேற்று தமிழ் மொழியில் பாடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கு வந்த பிக்கு ஒருவர் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாமென குழப்பம் விளைவித்த காணொளியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து குறித்த பிக்குவிற்கு சில விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளதுடன், நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4