அன்னையின் திருவுருவச் சிலை உடைப்பு: பொலிஸார் விசாரணை

Prathees
4 years ago
அன்னையின் திருவுருவச் சிலை உடைப்பு: பொலிஸார் விசாரணை

பேருவளை, மக்கொன காலி வீதியிலுள்ள புனித மரியாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னையின் திருவுருவச் சிலை நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈஸ்டர்  தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று இவ்வாறான நாசகார செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என புனித மேரிஸ் மிஷனரி சேவைகள் தேவாலயத்தின் செயலாளர் ரொஹான் பேட்ரிக் பெரேரா தெரிவித்தார்.

16ம் திகதி காலை இந்த தேவாலயத்தில் நடந்த ஆராதனையின் போது காலி வீதியில் அன்னையின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டிருந்த  பாதுகாப்பு கண்ணாடியை யாரோ ஒருவர் உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்இ சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4