நாளை முதல் நான்கு மணி நேர மின்வெட்டு வெளியானது அட்டவணை!

Nila
4 years ago
நாளை முதல் நான்கு மணி நேர மின்வெட்டு  வெளியானது அட்டவணை!

எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அதேபோல், 19 மற்றும் 20ஆம் திகதிகளிலும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, குறித்த தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4