காலி முகத்திடலில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான மாந்திரீக பூஜை வழிபாடுகள்!

#SriLanka #Sri Lanka President #government
Reha
4 years ago
காலி முகத்திடலில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான மாந்திரீக பூஜை வழிபாடுகள்!

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிகொடுக்காத நிலையில் நேற்றையதினம் காலி முகத்திடல் போராட்ட களத்தில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான மாந்திரீக பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரி அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 9 ஆவது நாட்களாக தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், பில்லி சூனியம் செய்வதற்கென்று மாத்தறையில் இருந்து வந்த ஒருவர் விசேட பூஜை வழிபாடுகளை செய்துள்ளார்.

பெரும்பான்மை இன மக்களால் பல கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் ராஜபக்ச அரசாங்கம் பதவி விலகாததால் இவ்வாறு பில்லி சூனியம் வைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4