புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - தந்தையும் மகனும் பலி!

Prathees
4 years ago
புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - தந்தையும் மகனும் பலி!

பலப்பிட்டிய, வெலிவத்த புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பலபிட்டிய, மிகெட்டுவத்த பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய தந்தை மற்றும் 16 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4