ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு பசில் வெளியேறவில்லை!!

Prabha Praneetha
4 years ago
ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு பசில் வெளியேறவில்லை!!

பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார் என்ற செய்திகளை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மறுத்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் இந்த சர்வதேச பயணிகளின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , அமெரிக்காவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் இரத்மலானை விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை நேற்று கொரோனா தொற்று உறுதியாகியிருந்த பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4