IMF இற்கு செல்ல முன் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

Prathees
4 years ago
IMF இற்கு செல்ல முன் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எதிர்வரும் 18ஆம் திகதி அரசாங்கக் குழுவினர் செல்லவுள்ள நிலையில், நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை முதலில் வெளிக்காட்டும் வகையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவை இல்லாத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல இராஜாங்க அமைச்சர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

எனினும் புதிய அமைச்சரவையில் பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ச மற்றும் ஷசீந்திர ராஜபக்ச ஆகியோர் இடம்பெறமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4