போலி நாணயத் தாள்கள் குறித்து எச்சரிக்கை

Prathees
4 years ago
போலி நாணயத் தாள்கள் குறித்து எச்சரிக்கை

போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அது குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கம்பஹா - தாரலுவ பகுதியில்  நேற்று 29 வயது நபரிடமிருந்து, 1,000 ரூபா நாணயத் தாள்கள் 34 உம்
சில 5,000 ரூபா நாணயத்தாள்களும்  பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டன. 

அத்துடன், குறித்த நபர் போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்திய, கணினி உள்ளிட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. 

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், போலி நாணயத்தாள்கள் குறித்து, பொதுமக்களும், வர்த்தகர்களும் அவதானத்துடன் இருப்பதுடன்இ அருகில் உள்ள பொலிஸ்  நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4