நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினமும் மழையுனான வானிலை நிலவக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

#SriLanka #Rain #Lanka4
Reha
4 years ago
நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினமும் மழையுனான வானிலை நிலவக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினமும் மழையுனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில், இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா, வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பாகங்களில், 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4