இறுதி யுத்தத்தில் காணாமல் போன மகனை தேடி வந்த தந்தை உயிரிழப்பு!

Mayoorikka
4 years ago
இறுதி யுத்தத்தில் காணாமல் போன மகனை தேடி வந்த தந்தை உயிரிழப்பு!

இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன தனது மகனை 12 ஆண்டுகளுக்கு மேலாக தேடிவந்த மற்றும் ஒரு தந்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த முனியாண்டி கறுப்பையா என்ற தந்தை கடந்த கால யுத்த காலத்தின் போது தனது மகனான மோகனதாஸ் காணாமல் போன நிலையில் அவரை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தந்தை நேற்றைய தினம் (11) உயிரிழந்துள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்கள் பலர் தமது பிள்ளைகளை தேடி தேடி சுகயீனம் அடைந்து உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4