கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்களத்தில் உயிரிழந்த பிரபல பாடகர்

Nila
4 years ago
கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்களத்தில் உயிரிழந்த பிரபல பாடகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ் ஷிராஸ் என்ற ராப் இசைக்கலைஞர் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளார்.
 
இன்று (12) அதிகாலை காலி முகத்திடலில் உள்ள அரச எதிர்ப்புப் போராட்ட களத்தில் கூட்டத்தினருக்காக நிகழ்ச்சியை நிகழ்த்திய பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பாடலைப் பாடிக்கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார்.
 
இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
உயிரிழப்பிற்கான காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4