முகவரி கேட்க வந்து நகையை அறுத்துச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

Prathees
4 years ago
முகவரி கேட்க வந்து நகையை அறுத்துச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

காலை முற்றத்தை துடைக்கும் போது 370,000 ரூபா பெறுமதியான தங்க நகையை அறுத்துச்சென்ற சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நாமல் பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் கண்டிஇ கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

கம்பளை கிரிந்த கல்கெடியாவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை அறுத்துள்ளார்.

காலையில் அந்த பெண் முற்றத்தை துடைத்துக்கொண்டிருந்தபோது, ​​ஒருவரைப் பற்றித் தகவல் கேட்பதாகக் கூறி அப்பெண்ணை அணுகி அவர் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுண் தங்க நகையை அறுத்துச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், அருகில் இருந்தவர்களால் பிடிக்கப்பட்டு வீதியோரத்தில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து பின்னர் கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

 பொலிசார் வந்து அவரிடம் இருந்த தங்க நகையை கண்டுபிடித்தனர், சந்தேக நபர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4