அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Nila
4 years ago
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் நேற்றைய தினம் கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலருக்கு செலுத்தப்படும் ரூபாயின் பெறுமதி பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதேவேளை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாகவும் விற்பனை விலை 327.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சந்தை ஆதாரங்களுக்கமைய, கறுப்பு சந்தை அந்நிய செலாவணி வர்த்தகர்களின் மாற்று விகிதம் ஒரு டொலருக்கு 350-360 ரூபாய்க்கு இடையில் காணப்பட்டுள்ளது.

கறுப்பு சந்தையில் கடந்த சில நாட்களாக டொலர் ஒன்றுக்கு 400 – 420 ரூபாய் வரையில் வழங்கப்பட்ட நிலையில் நேற்று 350 – 360 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளாலும், பணம் அனுப்பும் தொகை அதிகரித்ததாலும் கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4