நாட்டின் நலனுக்காக ஏ9 வீதியில் கைகளில் மெழுகுவர்த்தி விசேட பிரார்த்தனை

Prathees
4 years ago
நாட்டின் நலனுக்காக ஏ9 வீதியில் கைகளில் மெழுகுவர்த்தி விசேட பிரார்த்தனை

நாட்டில் காணப்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடி நீங்கி அமைதியான நிலை ஏற்பட கிளிநொச்சியில் வன்னி கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  விசேட பிரார்த்தனை ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அங்கிலிக்கன் மிஷன் இலங்கை திருச்சபை முன்பாக இன்று (11) பிற்பகல் 5 மணியளவில் குறித்த வழிபாடு  இடம்பெற்றது.

நாட்டில் தற்பொழுது உள்ள நிலை மாறி, மக்களிற்கு அமைதியும், பொருளாதார நெருக்கடியற்ற நிலை உருவாக இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என குறித்த பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.

பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் ஏ9 வீதியில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பாடல் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4