மருந்து வாங்க பணமில்லை.. உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.. மக்களிடம் கெஞ்சும் சுகாதார அமைச்சு

Prathees
4 years ago
மருந்து வாங்க பணமில்லை.. உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.. மக்களிடம் கெஞ்சும் சுகாதார அமைச்சு

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சுகாதார அமைச்சு, பரோபகாரர்களின் உதவியை நாடுகிறது.

சில வைத்தியசாலைகளில் ஓரிரு மாதங்களுக்கு மாத்திரமே மருந்துகள் கிடைப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

கிளினிக்  நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் இரண்டு மாதங்களுக்கு மருந்து விநியோகத்தை நிறுத்தவும், ஒரு மாதத்திற்கு மட்டுமே மருந்துகளை வழங்கவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசர பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்ளுமாறு மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4