நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவித்தல்!

Nila
3 years ago
நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவித்தல்!

வரும் ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தை மேலும் குறைக்க கூடியதாக இருக்கும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன் ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. 16 , 17 ஆம் திகதிகளில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுலாகும் எனவும் அவர் கூறினார்.

அதேசமயம் 18 ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!