இன்றும் நாளையும் வங்கி சேவைகள் வழமைபோன்று இடம்பெறும்!

#SriLanka #Bank #Lanka4
Reha
3 years ago
இன்றும் நாளையும் வங்கி சேவைகள் வழமைபோன்று இடம்பெறும்!

இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும், பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்றும், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!