மின்சாரம் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது நானும் வீதிக்கு வரவேண்டும் என நினைக்கிறேன்: எஸ்.பி

Prathees
4 years ago
மின்சாரம் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது நானும்  வீதிக்கு வரவேண்டும் என நினைக்கிறேன்: எஸ்.பி

எண்ணெய் மற்றும் எரிவாயு வரிசையில் நிற்கும் மக்கள் அரசாங்கத்தை 'கோத்தா வீட்டுக்கு போ என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்தை சபித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

இது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக  அரசு சார்பிலும், மக்கள் முன்னணியின் சார்பிலும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ஏழெட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது தானும் பலகையை எடுத்து வீதிக்கு வர முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4