காலி முகத்திடலில் இருந்து வந்த வாகனங்களும் போராட்டத்திற்கு ஆதரவளித்தன

#SriLanka #strike #today
காலி முகத்திடலில் இருந்து வந்த வாகனங்களும் போராட்டத்திற்கு ஆதரவளித்தன

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலுக்கு முன்னால் உள்ள வீதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய சூழ்நிலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக வெளியேறுமாறு கோரி இன்று (09) காலை முதல் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் வீதியின் இருமருங்கிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது கட்சி சார்பற்ற மக்கள் போராட்டம் என்று அழைக்கப்பட்டது.

இதில் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள வீதியில் செல்லும் வாகனங்கள் ஊதுகுழல்களை முழங்கியமை விசேட அம்சமாகும்.

காலி முகத்திடலுக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தற்போது விஜேராம சந்தியிலிருந்து ஹைலெவல் வீதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4