புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

Prabha Praneetha
4 years ago
புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த ரயில் சேவைகள் இன்று தொடக்கம் 18 ஆம் திகதி வரையில் தற்பொழுதுள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில் ஒன்று எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கும் இது காலை 5.54 க்கு காங்கேசன்துறையை சென்றடையும்.

இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் இன்று (9) மற்றும் 17 ஆம் திகதிகளில் விசேட கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படும்.

காங்கேசன்துறையில் இருந்து இந்த ரயில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு கல்கிசையை காலை 6.00 மணிக்கு வந்தடையவுள்ளது.

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த ரயில் இரவு 7.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 5.05 க்கு பதுளையை சென்றடையும்.

இதேபோன்று, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இன்று மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்திரம் மற்றுமொரு ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4