மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்

Prabha Praneetha
4 years ago
மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்

இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பநிலை காரணமாக நிலவும் மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய இடங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை இடியுடன் கூடிய கடுமையான வானிலை நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4