இன்று காலி முகத்திடலில் போராட்டம்: பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில்!

Prathees
4 years ago
இன்று காலி முகத்திடலில் போராட்டம்: பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில்!

காலி முகத்திடல் மைதானத்தில் இன்று (09)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சிப்பதைத் தடுப்பதற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இருந்து விசேட பொலிஸ் குழுக்களும் தேவையெனில் இராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில், 

போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றார்.

அல்லது அவ்வாறு செய்யாமல் கலவரமாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி செயலகம் மற்றும் முக்கியஸ்தர்களின் வீடுகளுக்குள் நுழைய முயற்சித்தால், பலவந்தமாகத் தடுத்து நிறுத்துவோம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4