நீர் இறைத்துக் கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்

Mayoorikka
4 years ago
 நீர் இறைத்துக் கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில் வெங்காயத்திற்கு ஒருவர் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது, மற்றொருவர் மின்சார வயரின் உதவியுடன் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, மின்சார வயரில் இருந்து மின் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடார். எனினும் அவர் மின்சாரம் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

22 வயதுடைய செல்வராசா கேதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4