பரவாயில்லை வாங்கிக் கொள்ளுங்கள்: பொலிஸாருக்கு ரோசாப் பூ கொடுத்த பெண்!

Mayoorikka
4 years ago
பரவாயில்லை வாங்கிக் கொள்ளுங்கள்: பொலிஸாருக்கு ரோசாப் பூ கொடுத்த பெண்!

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நேற்றும் (08) பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முக்கியமான இடங்களில் வீதியை மறித்து இரும்பு கம்பிகளைக் கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறி செல்லமுடியாத வகையில், இறுக்கப்பட்டிருந்தன. பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியும் இவ்வாறே அமைக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கம்பி வேலிக்கு அருகில் சென்ற, பெண்ணொருவர் சிவப்பு நிறத்திலான ​ரோஜா பூவை, கம்பிவேலிக்கு அப்பால் நின்றிருந்த பொலிஸாரிடம் கொடுத்தார்.

பொலிஸார் எவருமே வாங்கவில்லை. எனினும், “வாங்கிக்கொள்ளுங்கள், உங்களுடைய பிள்ளைகளும் இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஈடுபடலாம், பரவாயில்லை வாங்கிக்கொள்ளுங்கள்” என அப்பெண் கூறினார்.

அதன்பின்னர், ​சீருடையில் இருந்த பொலிஸார் ​ஒருவர் வாங்கிக்கொண்டார். ரோஜாவை கொடுத்த அப்பெண், திரும்பி வந்துவிட்டார்.

rose

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4