‘திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்... பேருந்து இயங்காது – இப்போதே ஊர்களுக்கு செல்லுங்கள்’: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

#SriLanka #Travel #Bus
‘திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்... பேருந்து இயங்காது – இப்போதே ஊர்களுக்கு செல்லுங்கள்’: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!


நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, போதிய எரிபொருள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பேருந்துகளை இயக்க முடியாது என தெரிவித்தார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக தனியார் பேருந்து தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால்  தொலைதூர பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்டார்.

எனவே, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4