பாணுக்கு குரைக்கும் நாய்: மீனுக்கு ஏன் குரைப்பதில்லை! இந்திக அனுருத்த எம் பி கேள்வி

Mayoorikka
4 years ago
 பாணுக்கு குரைக்கும் நாய்: மீனுக்கு ஏன் குரைப்பதில்லை!  இந்திக அனுருத்த எம் பி கேள்வி

இந்த பாராளுமன்றத்தின் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், எரிபொருள், காஸ், டீசல், மண்ணெண்ணெய் வரிசைகளுக்குச் சென்று நாங்கள் எதிரணியினர் எனக் கூறுங்கள் பார்ப்போம் என எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்த ஆளும் கட்சியின் எம்.பியான இந்திக அனுருத்த, உள்ளே செய்யமுடியாததை வெளியே சென்று செய்கின்றனர் என்றார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்க வேண்டுமாயின், அனுரகுமார திஸாநாயக்கவுக்கு 105 பேர் தேவை. சஜித்துக்கு 70 பேர் தேவை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு 112 பேர் தேவை. அதனால்தான், பாராளுமன்றத்துக்குள் செய்யாமல், வெளியே கொண்டு சென்றுவிட்டனர் என்றார்.

பாண் விற்பவர்களையும் நாய்க்குத் தெரியும், மீன் விற்பவர்களையும் நாய்க்குத் தெரியும் என்று தெரிவித்த அவர், பாண் விற்பனை செய்பவரை கண்டு குரைக்கும் நாய், மீன் விற்பவரைக் கண்டு ஏன்? குரைப்பதில்லை. ஆகையால்தான், இந்த பாராளுமன்றம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளுக்குச் சென்று, நாங்கள் எதிரணியினர் எனக் கூறுங்கள் பார்ப்போம் என சவால் விட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4