சலுகை விலையில் புத்தாண்டிற்கான நிவாரணப்பொதிகள் -வர்தக அமைச்சு தெரிவிப்பு

Nila
4 years ago
சலுகை விலையில் புத்தாண்டிற்கான நிவாரணப்பொதிகள் -வர்தக அமைச்சு தெரிவிப்பு

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குகின்றன.

இந்த நிவாரணப் பொதி 1,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையை விட நுகர்வோர் 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து.

இந்தப் புத்தாண்டு நிவாரணப் பொதி நாளை முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4