அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாட்டின்றி தனியார் துறைவசம் கையிருப்பில் உள்ளது - தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம்

#SriLanka
Reha
4 years ago
அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாட்டின்றி தனியார் துறைவசம் கையிருப்பில் உள்ளது - தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம்

அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாட்டின்றி தனியார் துறைவசம் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளர்களுக்கான தையல் இழைகள் மற்றும் இருதய நோயாளர்களுக்கான ஸ்டென்ட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மருந்துப் பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க, நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டு பல உயிர்காக்கும் மருந்துகள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் மிகவும் அத்தியாவசியமான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4