மக்களை குற்றவாளிகளாக்காதீர்கள்: முன்னாள் ஊடகத்துறை அமைச்சர்

Prathees
4 years ago
மக்களை குற்றவாளிகளாக்காதீர்கள்: முன்னாள் ஊடகத்துறை அமைச்சர்

இன்று வீதிகளில் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் நிலையில் மக்களை பிரதிவாதிகளாக பார்க்காமல் முறைப்பாடு செய்பவர்களாக பார்க்குமாறு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அழைப்பு விடுத்துள்ளார்.

சமாதான முன்னெடுப்புகள் வன்முறையாக மாறாமல் பார்த்துக்கொள்வது ஒட்டுமொத்த மக்களின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 ஏனெனில் மக்கள் வீதிக்குக் கொண்டு வந்த போராட்டம் கட்சி சார்பற்றது அதே போன்று அவர்களின் பிரச்சனைகளும் கட்சி சார்பற்றவை.

அவற்றுக்கான தீர்வை அனைவரும் பாரபட்சமின்றி பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நாட்டின் குடிமக்கள் 225 ஐ தீய எண்ணாக பார்க்கிறார்கள்

அரசியல்வாதிகளாகிய நாம் எமது பாராளுமன்றச் சிறப்புரிமைகளில் பாதுகாப்பாக இருக்கும் போது சக குடிமக்களின் பாதுகாப்பின்மையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4