இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பவர் கட் நேரங்கள் அறிவிப்பு

Nila
4 years ago
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பவர் கட் நேரங்கள் அறிவிப்பு

வார இறுதியில் (9, 10) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10) A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலம் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4