புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் விசேட பேருந்து சேவை

Nila
4 years ago
புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் விசேட பேருந்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு, பயணிகளுக்காக நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பேருந்து சேவையினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பேருந்து மையத்திற்கு மேலதிகமாக கடவத்தை, கடுவலை மற்றும் மாக்கும்புர உள்ளிட்ட மையங்களில் இருந்தும் இந்த விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.

இந்த பேருந்து சேவைகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ள நிலையில், இரண்டாம் கட்டமானது பயணிகளின் கோரிக்கைக்கு அமைய முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவையானளவு எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால், புத்தாண்டு பேருந்து சேவையினை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டு காலத்தில் தொடருந்து சேவைகள் இடம்பெறாது என வெளியாகியுள்ளதாக தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் அதிகளவான தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை இன்று பிற்பகல் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4