ஜனாதிபதியின் பிரத்தியேக ஊழியர்களின் நெருங்கிய அதிகாரியால் சிரமத்திற்குள்ளாகியுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Prathees
4 years ago
ஜனாதிபதியின் பிரத்தியேக ஊழியர்களின் நெருங்கிய அதிகாரியால்  சிரமத்திற்குள்ளாகியுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனம்

ஜனாதிபதியின் பிரத்தியேக ஊழியர்களின் நெருங்கிய அதிகாரி ஒருவரின் அழுத்தத்தினால் அம்பத்தளை பிரதேசத்தில் உள்ள டீசல் நிரப்பு நிலையமொன்றுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரின் மனைவிக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் விநியோகிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் இவ்வாறு நெருக்கடி நிலையிலும் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னுரிமை வழங்குவது பாரிய அநீதி என கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்

தற்போது நிலவும் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவது ஜனாதிபதிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எட்டு பெரிய டீசல் பவுசர்களை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தற்போது மேலும் ஆறு டீசல் பவுசர்கள் பெற்றோல் நிலையத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4