மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு கவுன்சில் பதவி விலகியுள்ளது

Mayoorikka
4 years ago
மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு கவுன்சில் பதவி விலகியுள்ளது

இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனா தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு தலைமை தாங்கினார். 

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுக் கொள்கை விஷயங்களில் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020 ஆகஸ்ட்டில் தேசிய விளையாட்டு கவுன்சிலை நியமித்தார்.

தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மஹேல ஜயவர்தன – தலைவர் ஜூலியன் பொலிங் – குழு உறுப்பினர் குமார் சங்கக்கார – குழு உறுப்பினர் டிலந்த மலகமுவ – குழு உறுப்பினர் கஸ்தூரி செல்லராஜா வில்சன் – குழு உறுப்பினர் சுபுன் வீரசிங்க – குழு உறுப்பினர் ரொஹான் பெர்னாண்டோ – குழு உறுப்பினர் ருவன் கேரகல – குழு உறுப்பினர் சஞ்சீவ விக்கிரமநாயக்க – குழு உறுப்பினர் மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹொட்டி – குழு உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவீந்திர சில்வா – குழு உறுப்பினர் ரொவேனா சமரசிங்க – குழு உறுப்பினர் யஸ்வந்த் முத்தேடுவேகம – குழு உறுப்பினர் ஏ.ஜே.எஸ்.எஸ் எதிரிசூரிய – குழு உறுப்பினர் தியுமி அபேசிங்க – செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4