நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்! இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் தகவல்

Mayoorikka
4 years ago
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்! இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் தகவல்

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதை தீர்ப்பதற்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சி பேதமின்றி செயற்படவேண்டியதன் அவசியத்தையும் சபாநாயகர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

நாம் தோற்றுவிடுவோம் என்றால் அது நாடாளுமன்றத்தின் தோல்வியாகவே கருதப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் தொடர்பில் உடனடியாக நாம் ஆராய வேண்டி உள்ளதாகவும், இல்லையேல் ஆயிரம் உயிர்கள் கொல்லப்படும் ஆபத்து உள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4