ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சொந்த நாடுகளுக்கு திரும்பும் சுற்றுலாப் பயணிகள்

Prathees
4 years ago
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக  சொந்த நாடுகளுக்கு திரும்பும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடுத்து தற்போது இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்திவிட்டு சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே தங்களுடைய ஹோட்டல் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டு திரும்பிச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தத் துறையில் உள்ள தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது எனவும் அவர்களது சொந்த நாடுகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்றவற்றாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையால் சுற்றுலாத்துறை மீண்டும் பின்னடைவை சந்திக்கும் என இத்துறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4