பலத்த பாதுகாப்புடன் சென்ற கொள்கலன்: சுங்கத்திணைக்களம் விளக்கம்

Mayoorikka
4 years ago
பலத்த பாதுகாப்புடன் சென்ற கொள்கலன்: சுங்கத்திணைக்களம் விளக்கம்

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜய கொள்கலன் முனையத்தில் பலத்த இராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள கொள்கலன் குறித்து இலங்கை சுங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

இராணுவ பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று கொண்டுசெல்லப்படுவதுபோன்ற காணொளியும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்த கொள்கலனில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின் அனுமதியுடன் அகற்றப்படும் கதிரியக்க பொருட்கள் உள்ளன. இந்த கதிரியக்க பொருட்கள் மீள் ஏற்றுமதி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெளிவு படுத்தலொன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளியும் புகைப்படமும் தவறானது. இது தொடர்பில் ஊடகங்களும் சமூக ஊடகப்பயனர்களும் மக்கள் மத்தியில் இதனை பகிரும் போது அவதானமாக செயற்படுமாறு இலங்கை துறைமுக அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4