அலி சப்ரியின் வெற்றிடத்துக்கு புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன சத்தியப்பிரமாணம்?

Nila
2 years ago
அலி சப்ரியின் வெற்றிடத்துக்கு புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன சத்தியப்பிரமாணம்?

புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இராஜினாமா செய்தமையை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு பந்துல குணவர்தன நியமிக்கப்படுவாரென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலி சப்ரிக்கு முன்னர் பெசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்ததோடு, அமைச்சர்வை அமைச்சர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி விலகியிருந்த நிலையில் நேற்று புதிய நிதியமைச்சராக அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

எனினும், இன்று அவர் அப்பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.