ரணில் விக்ரமசிங்கவுக்கு புதிய பதவி? வெளியான அறிக்கை

Nila
4 years ago
ரணில் விக்ரமசிங்கவுக்கு புதிய பதவி? வெளியான அறிக்கை

ரணில் விக்ரமசிங்க எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சி நேற்று தெரிவித்துள்ளது.

தேசிய நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அனைத்துக் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ரணில் விக்ரமசிங்கவின் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

அதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கிணங்க அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து குழுவொன்று அமைத்து தேசிய நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளதாகவும் அந்த நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் கிடையாதென்றும் அந்தக் கட்சி அ தெரிவித்தது.

இதேவேளை, கட்சி பேதங்களின்றி தேசிய ஒருமைப்பாட்டுடன் செயற்பட வேண்டுமெனவும் பாராளுமன்றம் கூட்டப்பட்ட உடனேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4