இளம் ஊடகர் அனுருத்த பண்டாரவுக்கு பிணை !
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவின் தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமை தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .



