இலங்கையில் இந்திய இராணுவம் நிறுத்தப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

#SriLanka #India
இலங்கையில் இந்திய இராணுவம் நிறுத்தப்படவில்லை - இந்திய உயர்ஸ்தானிகராலயம்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு தனது படைகளை அனுப்புவதாக பரவி வரும் வதந்திக்கு விளக்கம் அளித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கைகள் மிகவும் தவறானவை மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற ஊடக அறிக்கைகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கிறது.

உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கைகளை கண்டித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினர் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்ப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4