பாடசாலை நேரம் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

#SriLanka #School
Nila
4 years ago
பாடசாலை நேரம் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபம், அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுதராதர சாதாரணத்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4