மொரட்டுவையில் பதற்றம் - மேயரின் வீட்டிற்கு கல் தாக்குதல்

Nila
4 years ago
மொரட்டுவையில் பதற்றம் - மேயரின் வீட்டிற்கு கல் தாக்குதல்

பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடாளாவிய ரீதியில் பொதுமக்களால் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்  மொரட்டுவையில் உள்ள மேயரின் இல்லத்திற்கு முன்பாகவும் மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மொரட்டுவை மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

மேயரின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து இன்று மாலை அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து குறித்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4