நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தியில் எவ்வித மெய்யும் இல்லை. - பொலிஸ் மா அதிபர்.

#SriLanka #Police #Curfew
நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தியில் எவ்வித மெய்யும் இல்லை. - பொலிஸ் மா அதிபர்.

எதிர்வரும்  3 ஆம் திகதி ஞாயிறன்று, நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டத்துக்கு  சமூக வளைத் தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  அன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படலாம் என பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அன்றைய தினம்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் எந்த  தீர்மானமும் இதுவரை  எடுக்கப்படவில்லை என  சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்தார்.

பொலிஸார் பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை மதிப்பதாகவும், அதனால் குறித்த  ஆர்ப்பாட்டம் தொடர்பில் எந்த தடைகளையும் பொலிஸார் ஏற்படுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்ட அவர்,  ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லை மீறி  பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு சென்றால் பலப் பிரயோகம் செய்ய வேண்டி ஏற்படும் எனவும்  எச்சரித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4