ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு! கொழும்பில் தொடரும் பதற்றம்

Mayoorikka
4 years ago
 ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு! கொழும்பில் தொடரும் பதற்றம்

ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நேற்று (31) இடம்பெற்றது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பெருமளவு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களால் இராணுவ வாகனம் ஒன்று கொழுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில் வர்த்தக அமைச்சர் பந்துல வீட்டை சுற்றிவளைத்தும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று உள்ளதாக தெரிவக்கப்படுகிறது.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4