தனியார் பஸ் சேவையை மட்டுப்படுத்த தீர்மானம்!

Nila
4 years ago
தனியார் பஸ்  சேவையை மட்டுப்படுத்த தீர்மானம்!

இன்றைய தினம் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது குறைவடையக்கூடும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய டீசல் தட்டுப்பாடு காரணமாக, 15 சதவீதமான தனியார் பஸ்களே நேற்றைய தினம் சேவையில் ஈடுபட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டீசல் இன்மையால், இந்த நிலைமை இன்று மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 முதல் 15 சதவீதமளவில் இன்றைய தினம் பஸ்கள் சேவையில் ஈடுபடும். வரிசைகளில் காத்திருந்து பேருந்துகளுக்கு நிரப்பிய டீசல் இன்றைய தினத்துடன் தீர்ந்து போகும்.

எனவே, டீசலைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரிடம் கோரியுள்ளாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4