இலங்கை தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்

Nila
4 years ago
இலங்கை தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகள் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டின் சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளே அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று முற்பகல் சந்தித்தனர்.

இலங்கை பணியாளர்களுக்கு அதிகளவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தென் கொரியாவின் அரசாங்க கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் Koo Yun-cheol ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

சுற்றுலா வலயங்களை மேம்படுத்துவது குறித்து தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக எகிப்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4