இரவு அமுல்ப்படுத்திய ஊரடங்கு அதிகாலை தளர்த்தப்பட்டது

Nila
4 years ago
இரவு அமுல்ப்படுத்திய ஊரடங்கு அதிகாலை தளர்த்தப்பட்டது

களனி மற்றும் கொழும்பின் சில பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பதிவான சில அசம்பாவித சம்பவங்களையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, கல்கிஸை, நுகேகொடை மற்றும் களனி ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு உடன் அமுலாகும் வகையில் காவல்துறைமா அதிபரால் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்ட குறித்த ஊரடங்கு இன்று(1) அதிகாலை 5 மணிமுதல் நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4